எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானம்

381 0

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி 128 ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கண்டி, மாத்தறை, பெலியத்த, காலி, மற்றும் சிலாபம் ஆகிய பகுதி களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.