தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 72 பேர் கைது

287 0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 72 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம்  80,862 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 உள் நுழையும் மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகளில் நேற்றைய தினம் மொத்தமாக 2,218 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் உரிய காரணமின்றி மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 234 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.