மன்னாரில் பெரும்போக பயிர்ச்செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்

342 0

மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கூட்டம் நேற்று (14) மாலை மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.குறித்த கூட்டத்தில் -2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில் கால்நடைகளை பராமரிப்பவர்களையும் ஒழுங்கு படுத்தி குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இம்முறை ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்தல் என்ற சிந்தனையின் அடிப்படையில் இயற்கை பசளை யின் மூலம் குறித்த பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.