டெங்கு ஒழிப்பு தொடர்பான தேசியக் கொள்கை ராஜித்தவிடம்

245 0

634890957rajithaடெங்கு ஒழிப்பு தொடர்பான தேசியக் கொள்கை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் தேசிய இணைப்பாளர் வைத்தியர் ஹசித திசேராவினால் குறித்த கொள்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

டெங்கு என்பது நாட்டின் சுகாதாரத் துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முக்கிய தொற்று நோயாகவுள்ளது.

இதேவேளை, இந்த நோய் ஏற்பட்டவர்களை பாதுகாக்க, சிகிச்சை பிரிவை பலப்படுத்துதல் மற்றும் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல் போன்றன மிக முக்கிய செயற்பாடுகள் என, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.