சமூக நலத்திட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது: இந்தியா டுடே மாநாட்டில் ஓ பன்னீர்செல்வம் பேச்சு

253 0
201701091112580356_ammas-dream-of-mission-2023-has-already-commenced_secvpfசமூக நலதிட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது என்று இந்தியா டுடே மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு இன்று துவங்கியது. இந்த மாநாட்டில் ஆறு மாநில முதல் அமைச்சர்கள் , தொழில் துறை வல்லுநர்கள் மற்றும் அரசியல், திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று தங்களது உரைகளை ஆற்றுகின்றனர்.இந்த மாநாட்டின் துவக்கவிழாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா விளக்கேற்றி துவங்கி வைத்தார்.துவக்க விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் திறந்து வைக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் விழாவில் பேசிய தமிழக முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:- சென்னையில் இந்த மாநாடு நடப்பது ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதாக உள்ளது. சமூக நல திட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது. ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழகம்  வளர்ச்சியடைந்து வருகிறது. புதுப்பிக்க தக்கமின்சாரம் உள்ளிட்ட திட்டங்களில் தமிழகம் தான் முன்னிலை வகிக்கிறது.  உயிரியல் தொழில்நுட்பத்திலும் முன்னிலை பெற நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.
சமூக நல திட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது. தமிழகம் தொழில் புரிவதற்கு ஏற்ற மாநிலமாக உள்ளது என  உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் 2023 தொலைநோக்கு திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. வலுவான  மத்திய அரசுக்கு சிறப்பாக செயல்படும் மாநிலங்கள்  அத்தியாவசியமான ஒன்றாகும். சிறந்த சுகாதார சேவைகள் வழங்கும் மாநிலங்களில் ஒன்றாக இன்று தமிழகம் உள்ளது” இவ்வாறு அவர்  பேசினார். முன்னதாக இந்த விழாவை துவக்கி வைத்தவுடன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கிளம்பிச்சென்றார்.