மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அதிகரிப்பு

49 0

சந்தையில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததை அடுத்து, புறக்கோட்டை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில், பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்யும் நிலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமையல் எரிவாயு விலை அதிகரித்ததை அடுத்து, பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் அதிகளவில் கருத்தாடல்கள் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலையில், கடந்த இரண்டு நாட்களில், புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில், மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக, புறக்கோட்டை ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.