விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறியமை அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

96 0

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சந்தை விலைகளை சந்தை பொருளாதாரத்தில் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும். இராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் அதை செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அடிக்கடி வாழ்க்கைச் செலவுக் குழு கூடியது. அரிசியின் விலை அதிகமாக இருந்தால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் விளைவாக வர்த்தகர்கள் விலைகளைக் குறைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது விலை கட்டுப்பாடு இல்லை என்றும், மக்கள் வாழ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
வர்த்தகர்களை சந்தையை கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

அரசாங்கத்திற்குள் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.