2ம் லெப் மாலதியின் 34 ம் நினைவு எழுச்சி நிகழ்வு-யேர்மனி,ஓபகவுசன்.

174 0

2ம் லெப் மாலதியின் 34 ம் நினைவு எழுச்சி நிகழ்வு யேர்மனியில் ஓபகவுசன் நகரில் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் நினைவுகூறப்பட்டது. மாலதியின் திருவுருவப்படத்துக்கு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் றைன நகரச் செயற்பாட்டாளர் திருமதி சாந்தா கிருஸ்னாஜயர். அவர்கள் மலர்மாலை அணிவித்தார்.

ஈகைச்சுடரினை தமிழ்ப்பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் ஜெயந்தி சூர்யகுமாரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். நிகழ்வு தொடர்ந்து எழுச்சி பாடங்களுடன் மாலதி விட்டுச்சென்ற அதிர்வுகள் என்ற நூல் யேர்மன் மொழியில் வெளியிட்டும் நடந்தது இன் நூலின் விமர்சனத்தை தமிழ்ப்பெண்கள் அமைப்பின் றைன நகரச்செயற்பட்டாளர் திருமதி கொன்சு மரியதாஸ் அவர்கள் விபரித்து தொடர்ந்து ஓபகெளசன் நகரைச்சேர்ந்த திருமதி பிறேமளா அகிலன் அவர்கள் வெளியீட்டு வைக்க முல்கைம்நகரைச் சேர்ந்த ஆசிரியர் திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் இந் நூலை வாங்கினார்கள்.

தொடர்ந்து களத்திலிருந்து புலம் பெயர்ந்த பெண்கள் என்ற தலைப்பில் கருத்துரையாடலும் நடைபெற்றது. யேர்மன் மொழியிலான மாலதி விட்டுச்சென்ற அதிர்வுகள் என்னும் நூலானது யேர்மனின் பல நகரங்களில் வெளியிடப்பட உள்ளது.