உயர்தரப் பரீட்சையில் முதல் இடங்களை பெற்றவர்கள்

261 0

1469782064385465213exam-department-l2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை மாத்தறை ராஹுல வித்தியாலயத்தின் ஆர்.ஏ.நிசால் புன்சர பெற்றுக்கொண்டார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் இரண்டாவது இடத்தை கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.ரொஸான் அக்தாரும், மூன்றாவது இடத்தை கல்முனை கார்மேல் பாத்திமா வித்தியாலயத்தின் ஜே.கிலெரின் தில்ஸானும் அடைந்துள்ளனர். பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலாம் இடத்தை குருணாகலை மலியதேவ மகளீர் பாடசாலையின் கே.டி.எம்.அமாயா தர்மசிறி பெற்றார்.

இரண்டாவது இடத்தை காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தின் யூ.ஜி.சத்துர ஜயசிங்க மற்றும் மூன்றாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரியின் எம்.பி.சவிந்து திமால் தானுக என்பவர் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வர்த்தக பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அகலங்க ராஜபக்ஸ நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கொழும்பு புனித ஜோசப் வித்தியாலயத்தின் விந்துல பெரேரா அந்த பிரிவில் இரண்டாம் இடத்தையும், ஹிங்குராக்கொட ஆனந்த மகளீர் கல்லூரியின் நிபுனி ரூபசிங்க என்ற மாணவி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் கலைப்பிரிவு முதலாம்6 இடத்தை கண்டி மகளீர் உயர் பாடசாலையின் இந்தீவரி கவரம்மன பெற்றுள்ளார்.

அந்த பிரிவில் இரண்டாம் இடத்தை மானிப்பாய் இந்து கல்லூரியின் பீ.குருபரேஸன் பெற்றுக்கொண்டுள்ளார்.மூன்றாம் இடத்தை கிரிபத்கொடை விஹாரமகாதேவி பாடசாலையின் ஏ.பாரமி என்ற மாணவி பெற்றுள்ளார். இதுதவிர, இயந்திரவியல் தொழினுட்ப பிரிவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன் ஜே.கனகசுந்தரம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை மாத்தளை விஞ்ஞான கல்லூரியைச் சேர்ந்த நிஸல் கொப்பேகடுவை அடைந்துள்ளார். அந்தபிரிவில் மூன்றாம் இடத்தை கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த ஏ.ரனதுங்க என்பவர் பெற்றுள்ளார். உயிர்முறை தொழினுட்ப பிரிவுவில் கேகாலை சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயத்தின் மலிதி தில்ரங்கி நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார். அதேவேளை, அந்த பிரிவில் இரண்டாம் இடத்தை கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தின் எம்.தத்சரணி அடைந்துள்ளார்.

மூன்றாம் இடத்தை ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தின் இல்யாஸ் பாதிமா பெற்றுக்கொண்டுள்ளார். பொது பாடநெறிகளுக்கு அமைய நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை கொழும்பு மியுஸியஸ் வித்தியாலயத்தின் திலார ஏக்கநாயக்;க பெற்றுள்ளார்.

பொது பாடநெறி பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை தனிப்பட்ட முறையில் பரீட்சைக்கு தோற்றிய தும்மோதர, பெல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தனஞ்ஜய விமுக்தி கருணாரத்வும். காலி, உலுவிட்டிகே பிரதேசத்தைச் சேர்ந்த லஹிரு சசங்க ஆகியோரும் பெற்றுக்கொண்டுள்ளனர்.