முல்லைத்தீவு மாவட்டத்தில் 42 ஆயிரத்து 158 குடும்பங்கள் மீள்குயேற்றம்

299 0

mullaitivuமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் நாற்பத்தி இரண்டாயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33750 பேர் வரையில் மீள்குடியேறியுள்ளனர் என மாவட்ட அரச அதிபர் ரூபதவி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதாவது துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் மூவாயிரத்து 786 குடும்பங்களைச் சேர்ந்த பதினோராயிரத்து 856 பேரும்

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டாயிரத்து 933 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 197 பேரும்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரத்து 961 குடும்பங்களைச் சேர்ந்த பதிதொன்பதாயிரத்து 415 பேரும்

கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் பதின்மூவாயிரத்து 224 குடும்பங்களைச் சேர்ந்த நாற்பத்தி இரண்டாயிரத்து 79 பேரும்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரவில் பன்னிரெண்டாயிரத்து 918 குடும்பங்களைச் சேர்ந்த நாற்பதாயிரத்து 14 பேரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் மூவாயிரத்து 336 குடும்பங்களைச் சேர்ந்த பதினோராயிரத்து 189 பேரும்

என மேற்படி ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மேற்படி நாற்பத்தி இரண்டாயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33ஆயிரத்து 750 பேர் வரையில் இதுவரை மீள்குடியேறியுள்ளனர் என மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள 632 வரையான கிராமங்களில் மேற்படி மக்கள் மீள்குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.