கூட்டுப்படைகளின் தளபதி பதவியை இல்லாதொழிப்பது குறித்து ஆலோசனை

368 0

kolitha-gunathilake-300-seithyகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி பதவியை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பதவியை தற்போது எயர் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க வகித்து வருகின்றார். கோலித குணதிலக்கவை ஒய்வுபெற வைத்து அவரது அலுவலகத்தை மூட வேண்டுமென ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் 2009ம் ஆண்டில் விசேட சட்டமூலமொன்றின் மூலம் இந்தக் காரியாலயம் நிறுவப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் நோக்கிலேயே இந்த கூட்டுப்படை பிரதானி பதவி உருவாக்கப்பட்டது. இந்தப் பதவியை வழங்கி சரத் பொன்சேகாவின் அதிகாரங்கள் முடக்கப்பட்டதும், மஹிந்த அரசாங்கத்துடன் சரத் பொன்சேகா முரண்படுவதற்கு பிரதான ஏதுவாக அமைந்தது.

எனினும் இந்தக் காரியாலயத்தை தொடர்ந்தும் கொண்டு நடத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தப் பதவியை ரத்து செய்யுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.