அவுஸ்திரேலியா, நியூசிலாந்து புதுவருட பிறப்பை கொண்டாடியுள்ளன.

347 0

32017 ஆண்டு பிறப்பை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கொண்டாடியுள்ளன.

அவுஸ்திரேலிய மக்கள் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஒன்றிணைந்து புதுவருடப்பிறப்பை மிக கோளாகலமாக, வான வேடிக்கைகளுடன் வரவேற்றுள்ளனர்.

இதற்கான நிகழ்வு இன்று அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் இடம்பெற்றது.

இதநிடையே, நியூசிலாந்து மக்களும் 2017 ஆம் ஆண்டை மிக கோளாகலமாக வரவேற்றுள்ளனர்.

இதேவேளை, பல நாடுகள் புதுவருடப்பிறப்பை மிக கோளாகலமாக வரவேற்க காத்திருக்கின்றன.

குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்து மற்றும் ப்ரேசில் ஆகிய நாடுகள் பலத்த பாதுகாப்பின் மத்தியில் புதுவருட பிறப்பை வரவேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.