விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்ததாக வழக்கு – இலங்கையில் கைதான தமிழ் இளைஞர் விடுதலை

355 0

imagesவிடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி செய்ததாக கூறி இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் வம்சாவளி இங்கிலாந்து பிரஜை வேலத்தாபிள்ளை ரேணுகருப்பன் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழ் வம்சாவளியை சேர்ந்த 36 இங்கிலாந்து பிரஜை வேலத்தா பிள்ளை ரேணுகருப்பன், இலங்கையில் உள்ள தனது வயதான தாயாரைப் பார்க்கவும், தனது தோழியை திருமணம் செய்து கொள்வதற்காகவும் கடந்த ஜூன் 2ஆம் திகதி இலங்கை வந்தார்.
அவரது உடலில் விடுதலைப் புலிகள் சின்னம் பச்சை குத்தப்பட்டிருப்ப தாக கூறிய காவல்துறையினர், இலங்கையில் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க அவர் முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி அவரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தை உடனடியாக வெளிநாட்டு காமன் வெல்த் அலுவலகம், இங்கிலாந்து தூதரகம் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் முன்பு வேலத்தாபிள்ளை ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஜூன் 17ஆம் திகதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இலங்கை வழக்கறிஞர் ஆண்டன் புனிதநாயகம் மேற்கொண்ட சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் காரணமாக வேலத்தாபிள்ளை ரேணுகருப்பன் அப்பாவி என்றும் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் பொய் வழக்குகள் என்றும் நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் ஜூலை 5ஆம் திகதி இங்கிலாந்து திரும்பினார்.