தற்போது நாட்டிற்குள் உயர்ந்தளவில் ஜனநாயகம் காணப்படுவதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகின்றார்.
வெவ்வேறு கருத்துக்களை வௌியிடுவதற்கும் தீர்மானிப்பதற்கும் சந்தர்ப்பம் உருவாகியிருப்பதன் மூலம் மக்களுக்கு ஜனநாயக சுதந்திரம் கிடைத்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
08 மாகாண சபைகளில் அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

