அதிபர் – ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…

119 0

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கும் போராட்டம், ஜனாதிபதி செயலகம் வரையில் பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்குமாறு கோரி கடந்த 11 நாட்களாக ஆசிரியர்கள் இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்பட்டு வருகின்றனர்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.