சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு 400 பேர் பாதிப்பு

321 0

கொரோனா பாதிப்பு இருந்தபோதே தீவிர கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இறந்துள்ளனர். 10 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 17-ம் தேதி 5 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் சேலத்தை சேர்ந்தவர்களும், 3 பேர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆவார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் 95 பேரும், மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு இருந்தபோதே தீவிர கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இறந்துள்ளனர். 10 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன. கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் விலை உயர்ந்த மருந்து ஊசிகள், குளுக்கோஸ் மூலம் செலுத்தப்படுகிறது என்றனர்.