சிரியாவில் நேற்று முதல் போர் நிறுத்தம் அமுல்

273 0

15556russiaசிரியாவில் நேற்று நள்ளிரவு முதல் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

சிரிய அரசாங்கத்துக்கும் போராளிகள் தரப்புக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் துருக்கி வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஆகியோர் உறுதிசெய்துள்ளனர்.

ஆயுததாரிகள் தரப்பிற்கும் சிரிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற இந்த உடன்படிக்கையில் பல ஆயுதக் குழுக்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த உடன்படிக்கையில் ஐ எஸ் ஐ எஸ் மற்றும் அல் நுஸ்ரா ஆகிய அமைப்புக்கள் கைச்சாத்திடவில்லை என சிரியாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த 2011 ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் வன்முறைகளால் 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மரணித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.