தமிழக மீனவர்களின் படகுகளை கையளிக்கவே மாட்டோம் – இலங்கை அரசு

251 0

mahinda-amaraஇலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களின் படகுகளையும், கடற்றொழில் உபகரணங்களை மீளக் கையளிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோதே கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக உள்நுழைவது தங்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போதுவரை தமிழக மீனவர்களின் 122 படகுகள் எம்மால் கைப்பற்றப்பட்டுள்ளன.

படகுகள் உள்ளிட்ட கடற்தொழில் உபகரணங்களை மீளக் கையளிக்க மாட்டோம். அவற்றை அரசுடமையாக்குவோம்.

கைதுசெய்யப்படும் மீனவர்களை மட்டும் விடுதலை செய்வோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.