கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல்!

36 0

வவுனியா தாண்டிக்குளம் கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் கொக்குவெளியில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளதுடன், பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு தண்டனை அனுபவித்து வந்துள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது .