ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் குரல் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது

265 0

download-3ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான குரல் பதிவொன்றை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த குரல் பதிவு தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றது என குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்த குரல் பதிவு கட்டாரிலிருந்து பேஸ்புக் வலைத்தளத்திற்கு பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், அதே குரல் பதிவை வெவ்வேறு நாடுகளிலிருந்து மேலும் பலர் பதிவேற்றியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.