கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை

471 0

article_1482999351-1கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று மாலை நேர வகுப்புக்கள் முடிந்து மாணவிகள் வீதியில் சென்றபோது இளைஞர்கள் சிலர் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர்.

இவ்விடயம் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

அத்துடன், பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மாலை 5.30 மணிக்கு பின்னர் கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புக்கள் நடத்துவது தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.