பால் மாவின் விலை அதிகரிக்குமா?

249 0

 

download-2பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 100 ரூபா முதல் 117 ரூபா வரை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன், 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 40 முதல் 46 ரூபா வரை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், பால்மாவின் தற்போதைய விலை நிலைமைகள் குறித்து ஆராயும் போது, விலை அதிகரிப்புக்கான தேவை கிடையாது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.