பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருஞ்காட்சியகத்தில் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் (காணொளி)

554 0

mannar-exயாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு வட்டத்தினால் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருஞ்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

காட்சிப்படுத்தப்பட்ட மன்னார் கட்டுக்கரை தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்களின் காண்காட்சியை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரும் சிரேஸ்ட பேராசிரியருமான வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நாடாவெட்டித் திறந்துவைத்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு வட்டத்தின் தலைவர் செல்வன் பொ.வர்ணராஜ் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்விற்கு கௌரவ விருந்தினர்களாக கலைப்பீடத்தின் பதில்

பீடாதிபதி கலாநிதி க.சுதாகர், வரலாற்றுத்துறைத் தலைவர் எஸ்.கிருஸ்ணராஜா மற்றும் தொல்லியல் இணைப்பாளர் சிரேஸ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டனர்.