திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரிந்து அகற்றுங்கள்- பொ.வாகிசன் (காணொளி)

376 0

mcயாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்து அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகரசபையினால் கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்பட்ட திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் செயற்றிட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் மாநகரசபை வாகனம் வருவதற்கு முன்னர் திண்மக்கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டம் விதிக்கப்படுவதாகவும், இதுவரையில் 40 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயன்தரு மரக்கழிவுகளை கட்டண முறையிலேயே அகற்ற வேண்டும், இறந்த விலங்குகளை திண்மக்கழிவுப் பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.