அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

251 0

download-6அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

சட்டம் குறித்து போதிய தெளிவில்லாத நபர்களினாலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், நாட்டிற்குள் விவாதமொன்றை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர், மாகாண சபைகளின் யோசனைகளை பெற்று குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் அத்தியாவசியமான ஒன்றும் எனவும், இலங்கையை முதலீட்டுக்கு ஏற்ற நாடாக மாற்ற வேண்டும் எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதனால் குறித்த சட்டமூலத்தை மீண்டும் கலந்துரையாடலுக்கு எடுத்து அதனை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்.