அபிவிருத்தி சிறப்பு சட்டமூலம் தொடர்பில் உரிய தெளிவுப்படுத்தல் மேற்கொள்ளாமை காரணமாகவே அந்த சட்ட மூலம் மாகாண சபைகளில் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் ஷாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவிபிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட நிறுவகம் செயற்படுவது தொடர்பில், சுதந்திர கட்சி எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.