அபிவிருத்தி சட்ட மூலம் தோல்வி

400 0

rejected_ciஅபிவிருத்தி சிறப்பு சட்டமூலம் வடமேல் மாகாண சபையிலும் பெரும்பான்மை வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று வடமேல் மாகாண சபையில் இடம்பெற்றது.

இதன்போது ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன்படி, 20 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் தோல்வியடைந்தது.

வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க உள்ளிட்டவர்கள் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இதனிடையே, அபிவிருத்தி சிறப்பு சட்ட மூலம் மத்திய மாகாண சபையிலும் இன்று தோல்வி கண்டது.

குறித்த சட்ட மூலம் இன்று வாக்கெடுப்புக்கு உள்ளாக்கப்பட்ட போது, சபையின் ஆளுங்கட்சி சார்பில் சபை அமர்வில் 36 பேர் இருந்தனர்.

அவர்களில் 32 பேர் குறித்த சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

தொழிலாளர்கள் தேசிய சங்கத்தின் மூன்று உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சட்ட மூலம் ஏற்கனவே வடக்கு, வடமத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.