நாட்டில் கல்லும், மண்ணும் இல்லாததாலேயே பொருத்துவீட்டுத் திட்டத்துக்கு சம்மதித்தோம்!

264 0

dm-swaminathanவடக்கில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சுன்னாகத்தில் இருக்கும் அந்த வீடுகளை அவர்கள் ஆராயாமல் கதைக்கின்றனர்.

அத்துடன் வடக்கில் 65 ஆயிரம் கல்வீடுகளைக் கட்டுவதற்கு கல் இல்லை, மண் இல்லை இந்தளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலேயே நாங்கள் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.

கிளிநொச்சிக்கு இன்று பயணம் செய்திருந்த மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பாக மக்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றது என்ற காரணத்தினால் இத்திட்டத்தை நிறுத்தமுடியாது. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதன்படியே இத்திட்டம் முன்னெடுக்கப்படும். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் இதனையே தெரிவித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.