தரம் பெற்ற புதிய அதிபர்களின் நியமனம் தொடர்பானது அறிவித்தல்

270 0

npc103113bமத்திய கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய சித்தி பெற்ற தரம் 3 அதிபர்களை மாகாண பாடசாலைகளில் அதிபர்களாக நிலைப்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர, புதிய அதிபர்களை கடமை நிறைவேற்று அதிபர்கள் உள்ள பாடசாலைகள் உட்பட வெற்றிடமாக உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்களாக நிலைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் 16.12.2016 அன்று கூடிய வட மாகாண கல்விக் குழுவின் தீர்மானத்தின் படி வடக்கு மாகாணத்தில் உள்ள வகையில் வெற்றிடமாக உள்ள 207 பாடசாலைகளில் புதிய தரம் 3 அதிபர்களை நிலைப்படுத்துவதாகவும் ஏனையவர்களை பிரதி மற்றும் உப அதிபர்களாக ஆளணி வெற்றிடமுள்ள பாடசாலைகளில் நிலைப்படுத்துவதாகவும் முடிவு எடுக்கப்பட்டு 02.01.2017இல் கடமை ஏற்கக் கூடியவாறு பாடசாலைகள் வழங்குவதற்கான செயற்பாடு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

22.12.2016 அன்று ஒருசில கடமை நிறைவேற்று அதிபர்கள் மேற்கொண்ட எதிர்ப்பை காரணம் கூறி வட மாகாண கல்வி அமைச்சர் 04.01.2017 வரையும் பிற்போட்டிருந்தார்.

23.12.16 அன்று வட மாகாண கல்வியமைச்சின் ஒதுக்கீடு விவாதத்தில் எமது வேண்டுதலுக்கு அமைய வட மாகாண சபை உறுப்பினர்களால் எமது சட்டபூர்வமானதும் நியாயமானதுமான நியமன விடயத்தை எடுத்துக் கூறிய போதும் கல்வி அமைச்சர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இம்முடிவை ஏற்றுக் கொள்ளாத தாம் 26.12.2016 அன்று ஒன்று கூடி மாகாண கல்வியமைச்சின் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதெனவும் இல்லையேல் ஆளுநரிடம் முறுயிடுவது எனவும் ஏற்றுக் கொள்ளாவிடின் 09.01.2017 நீதிமன்றத்தை நாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 28.12.2016 இன்று மாகாண கல்வி அமைச்சின் முன் ஒன்று கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட புதிய அதிபர்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்த போது, எமது வட மாகாண அதிபர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் மற்றும் மாகாண கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு நேற்றைய தினம் முதலமைச்சர் வட மாகாண கல்வியமைச்சருக்கு ஏற்கனவே முதலமைச்சரால் வழங்கப்பட்ட சுற்று நிரூபத்திற்கு அமைய புதிய ஆண்டில் எமக்கு பாடசாலைகள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதற்கமைய செயலாளர் அவர்களால் எமக்கு பின்வரும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டது.

1. 02.01.2017 அன்று புதிய அதிபர்களில் கடமையேற்கக்கூடியவாறு அனைவருக்கும் ஒரே திகதியில் பாடசாலைகள் வழங்குவது எனவும்

2. கடமை நிறைவேற்று அதிபர்கள் உள்ள பாடசாலைகள் உட்பட 207 பாடசாலைகளுக்கு தரம் 3 அதிபர்களை நிலைப்படுத்துவதாகவும் ஏனையவர்களை பிரதி மற்றும் உப அதிபர்களாக ஆளணி வெற்றிடமுள்ள பாடசாலைகளில் நிலைப்படுத்துவதாகவும் உறுதி அளித்தார்.

31.12.2016 அன்று வலயக்கல்வி அலுவலங்களில் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இந்த நியமனங்களில் பாதிக்கப்படுபவர்கள் முறைப்பாடுகள் செய்து தீர்வு பெற முடியும் எனவும் உறுதியளித்தார்.