மாகாணங்களுக்கு இடையில் அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நாளை (05) முதல் நீக்குவதான முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.
சில நிபந்தனைகளின் அடிப்படையில் இவ்வாறு தடை நீக்கம் செய்ய கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கொவிட் தடுப்பு செயலணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.