புதிய சுகாதார வழிகாட்டல் நாளை – திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி?

284 0

நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் நாளை வெளியிடப்படவுள்ளது.

தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

நாளை வெளியிடப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் ஊடாக, மக்கள் ஒன்று கூடுவதற்கு தொடர்ந்தும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், திருமண நிகழ்வுகளுக்கான விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு, சம்பிரதாயங்களின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவானோரைக் கொண்டு திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு புதிய சுகாதார வழிகாட்டல் ஊடாக அனுமதிவழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன