நோர்வூட்டில் 12 பேருக்கு கொரோனா!

268 0

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் பிரிவில்  – நோர்வூட் நகரில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று காலை வெளிவந்தது.

இதனையடுத்து நோர்வூட் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்று, சமூர்த்தி வங்கி, மதுபானசாலையொன்று ஆகியன மூடப்பட்டன என்று மஸ்கெலயா பொது சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.

அதேவேளை, நோர்வூட் ஜனபதகொலனியில் மரண வீட்டுக்குசென்ற  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.