கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் மடுல்சீமையில் கைது!

257 0

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவரை மடுல்சீமைப் பொலிஸார் இன்று (03) முற்பகல் கைது செய்துள்ளதோடு, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

மடுல்சீமைப் பகுதியின் விராலிபத்தனை பெருந்தோட்டத்திலேயே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மடுல்சீமைப் பொலிஸாருக:கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து பொலிசார் விராலிபத்தனை பெருந்தோட்டப் பகுதிக்கு விரைந்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வலைத்தனர்.

அவ் வேளையிலேயே, தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த 375 மில்லிலீட்டர் கசிப்பும், 1000 மில்லி லீட்டர் கொண்ட கசிப்பு தயாரிக்கும் மூலத்திராவகமான கோடாவும் மீட்கப்பட்டன. கசிப்பு தயாரித்துக் கொண்டிருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், எரிவாயு சிலிண்டர் ஒன்று, அடுப்பு ஒன்று, பீப்பாய்கள் மற்றும் உபகரணத் தொகுதிகளையும், பொலிசார் மீட்டனர்.