பெண் காவல்துறை அதிகாரியொருவரை ஆபாசமாக படம் எடுத்த நபர் கைது!

257 0

பெண் காவல்துறை அதிகாரியொருவரை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹபராதுவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காலி- வன்சாவல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் வேலை நிறுத்தம் பெறப்பட்ட கான்ஸ்டபிள் ஒருவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.