திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதமிருக்கும் தமது உறவுகளிடம் இரக்கம் காட்டுமாறு அவர்களது பெற்றோரும் மனைவிமாரும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் ஒரு பெண் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தனது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்த நிலையில் சட்டரீதியாக விசாபெற்று சுற்றுலாவுக்குச் சென்ற தனது மகனை பிடித்துவைத்து வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்றதாக கையொப்பம் வைக்குமாறு நிர்ப்பந்திக்கிறார்கள்.
யுத்த காலத்தில் மிகமோசமாக மன உளைச்சலுக்கும், பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்த எங்களுக்கு எங்களது பிள்ளைகள் உண்ணாவிரதம் இருந்து வருவதான செய்தி எங்களை மனதளவில் பாதித்துள்ளது.
யுத்த காலத்தில் மன உளைச்சலுக்கும் பாதிப்புகளுக்கும் முகம் கொடுத்த எங்களுக்கு, பிள்ளைகள் உண்ணாவிரதமிருந்துவருவது இன்னும் மன உளைச்சலைத் தருகின்றது.
அத்துடன் அவர்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை மனித்து தயவு செய்து விடுதலை செய்யுங்கள் என திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள் பத்து பேரில் ஒருவரின் தந்தையான உமாகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்நிலையில் தான் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் இக்கட்டான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், எனது கணவர் கைது செய்யப்படும் போது இரண்டாவது குழந்தை ஏழு மாதம் வயிற்றில் இருந்தது. தற்போது எனது குழந்தைக்கு அப்பாவின் முகம் தெரியாது. மூத்த மகள் நான்கு வயது நாளாந்தம் அப்பா எங்கே என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றாள். தயவுசெய்து பிள்ளைகளுக்காகவாவது கணவனை விடுதலை செய்யுங்கள்.
மேலும் தனது அப்பாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நான்கு வயது பெண் குழந்தை அழுதவாறு கேட்டுக்கொண்டமை மனதை நெகிழ வைத்த சம்பவமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



