அரசாங்கத்தின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைவு!

263 0

origin_b46db4defc38b303166c38d1c4bd5786அரசாங்கத்தில் அங்கம் வகிக்கம் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய அரசாங்கத்தின் அங்கத்துவக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 10பேரும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 20பேரும் இணைந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் செயற்பாடுள் தொடர்பாக கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூட்டு எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஆளும் கட்சிக்குள் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றியுள்ளமை தெளிவாகத் தெரிவதாகவும் கூட்டு எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.