அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிப்பு

292 0

19274046821அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 19 மேலதிக வாக்குகளினால் தென் மாகாண சபையில் இந்த சட்டமூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 14 வாக்குகளும், எதிராக 33 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மாகாண சபையில் 7 மேலதிக வாக்குகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்திற்கு மாகாண சபைகளின்  அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக கடந்த வாரம் மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இதன்படி, வடக்கு, ஊவா, வடமத்திய மாகாண சபைகள் இந்த சட்டமூலத்தை கடந்த வெள்ளிகிழமை நிராகரித்திருந்தன.

மேலும், கிழக்கு மாகாண சபை இந்த சட்டமூலம் தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்கான சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது,