தென்னை அபிவிருத்திச் சபை,தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

329 0

imagesதென்னை அபிவிருத்திச் சபை வடக்கு மாகாணத்திலுள்ள தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போது பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி உரையாற்றும் போது இவ்வாறு கோரிக்கைவிடுத்தார்.

தென்னை அபிவிருத்திசபையின் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

189 தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு 3.5 மில்லியன் ரூபாவில் காசோலை வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தென்னைகளின் மண் ஈரப்பதன் பேணல், தென்னை மரங்களுக்கான டொலமைட் பிரயோகம், ஊடு பயிர்ச்செய்கை மற்றும் தென்னை மட்டக்குழி அமைத்தல் போன்றவற்றிற்கு மானியத்திட்டத்திற்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் அளவெட்டிப் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு தென்னைப் பயிர்ச்செய்கை தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் 5 வருடத்தை அண்டிய காலப்பகுதியில் பயன்பெறக்கூடிய தென்னங்கன்றுகளும் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன், தென்னை அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்