சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானார்!

289 0

ratnasiri-wickremanayakeசிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மதியம் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடந்த சில நாட்களாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று மதியம் காலமானார்.

சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சியாளராக இருந்தபோது 2000ஆம் ஆண்டு இவர் பிரதமராக பதவி வகித்தார்.

பின்னர் மகிந்த ராஜபக்ச காலத்திலும் பிரதமராக பதவி வகித்த இவர் 2005 இலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை மீண்டும் பிரதமராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.