ரஷ்ய வானூர்தியின் பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிப்பு

258 0

comet-650x372விபத்துக்குள்ளான ரஷ்ய வானூர்தியின் உடைந்த பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போரில் ரஷ்ய இராணுவம் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அங்கு போரிட்டு வருகின்றது.

இந்த நிலையில், ரஷ்ய இராணுவத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் வீரர்களுடன் ரஷிய இராணுவ வானூர்தி சென்ற நிலையில் அது விபத்துக்குள்ளானது.

அந்த வானூர்தியில் 92 பேர் பயணம் செய்தனர்.

சோச்சி நகரில் இருந்து புறப்பட்ட வானூர்தி கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் அனைவரும் பலியாகினர்.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடடிக்கையின் போது வானூர்தியின் உடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.