நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை கண்டுக்கொள்ள விசேட திட்டம்

283 0

img_0401நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர்களின் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் விசேட அடையாளம் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்ட தீமானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை இலகுவில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இரவு வேளைகளில் தெளிவாக தெரியக்கூடிய வகையில் விசேட காகிதம் கொண்டு குறித்த ஸ்டிக்கர் தயாரிக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களையும் அவற்றுடன் இணைப்பது குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அதன்பொருட்டு கோரிக்கையும் விடுத்துள்ளனர் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.