யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த ரெலிக்கொம் கோபுரம் சரிந்து விழுந்தது!

404 0

15747364_1588983237785663_1782018940112826741_nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ரெலிக்கொம் கோபுரம் சற்று முன் சரிந்து விழுந்தது.

இச்சம்பவம் இன்றுமாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நேரம் வீதியால் சென்ற பெண் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.

கடந்த ஒருவாரமாக இந்த கோபுரத்தில் திருத்தவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில்,இன்றைய தினமும் திருத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மதிய உணவுக்காக திருத்தவேலைகள் மேற்கொண்ட நபர்கள் சென்றபின்னர் குறித்த கோபுரம் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் ரெலிக்கொம் நிறுவனத்துக்கு முன்னால் இருந்த கால்நடை வைத்தியசாலையின் கட்டடங்கள், மின்கம்பங்கள் சேதமடை ந்துள்ளன.

அத்துடன் இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.வீதியின் குறுக்காக விழுந்து கிடக்கும் கோபுரத்தின் பகுதிகளை அகற்றும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

15747425_1588983194452334_1801684468739543028_n15697813_1588983184452335_6649029651983958947_n15697710_1588983211118999_924979885021244241_n