கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவின் காலணியை ஒருவர் சரிசெய்வது போன்ற காணொளி வெளியாகியுள்ளது. (காணொளி)

328 0

karகர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவின் காலணியை ஒருவர் சரிசெய்வது போன்ற காணொளி வெளியாகி கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் சேதன் ராம ராவ் காலமானதை அடுத்து மைசூரில் உள்ள அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா சென்றார்.

அங்கு, அவரது காலணியை ஒருவர் சரிசெய்வது போன்ற காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த காணொளி கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சித்தராமைய்யாவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, காலணியை சரிசெய்தவர் பணியாளர் அல்ல என்றும், அவர் சித்தராமைய்யாவின் உறவினர் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.