ரஜீவ் கொலை வழக்கு – இந்திய பிரதமருக்கு கடிதம்

257 0

rajiv_2410852f-720x4801இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் இந்திய பிரதமர் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கொலை தொடர்பான முக்கிய சாட்சியாளர் ஒருவரால் இந்த கடிதம் எழுப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், ‘சென்னை தடா நீதிமன்றத்தின் உத்தரவிட்டபடி, ராஜீவ் கொலையின் சதிப் பின்னணி தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் உரிய முறையில் விசாரணைகளை நடத்தவில்லை என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவின் மீது பதில் வழங்குமாறு மத்திய அரசுக்கும், புலனாய்வு பிரிவிற்கும்; உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தர்க்கரீதியிலான முடிவு ஏற்படும் வகையில், விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில், இநதிய பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்’என கோரி முக்கிய சாட்சியாளரால் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.