பௌத்த மதத்திற்குள்ள சந்தர்ப்பத்தை இல்லாது செய்யுமாறு யாரும் கூறவில்லை.- மனோ கணேஷன்

486 0

images-1அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு காணப்படும் சந்தர்ப்பம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன்,

‘முழு பாராளுமன்றத்தையும் நாங்கள் அரசியலமைப்பு சபையாக மாற்றியுள்ளோம். 21 பேரை கொண்ட செயற்பாடு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நானும் உறுப்பினராக இருக்கின்றேன். அளும் கட்சியிலுள்ளவர்கள் மாத்திரமன்றி எதிர்க்கட்சியிலுள்ளவர்களும் அதில் அங்கம் வகிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இருக்கின்றார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் அதில் அங்கம் வகிக்கின்றார். அவர்கள் மாத்திரமல்ல, கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இருவர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் அதில் அங்கம் வகிக்கின்றார். அனைவரும் ஒன்றாக கலந்துரையாடல்களை நடாத்தி கடமையாற்றுகின்றோம்.

பௌத்த மதத்திற்கு  தற்போதுள்ள சந்தர்ப்பத்தை இல்லாது செய்ய வேண்டாம் என இரண்டு மகாநாயக்க தேரர்களும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பௌத்த மதத்திற்கு தற்போதுள்ள சந்தர்ப்பத்தை நாம் ஒருபோதும் இல்லாது செய்ய போவதில்லை. அந்த விடயம் குறித்து நாம் கலந்துரையாடல்களை நடாத்தவும் இல்லை. தற்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நான் கூறுகின்றேன். எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார். பௌத்த மதத்திற்குள்ள சந்தர்ப்பத்தை இல்லாது செய்யுமாறு யாரும் கூறவில்லை. அதனால் மொழி, மதம், இனம் குறித்து கருத்துக்களை வெளியிட்டு, அதனூடாக இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க வேண்டாம் என்றே நான் கேட்டுக் கொள்கின்றேன்” என்று மேலும் குறிப்பிட்டார்