கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் 114 மீட்டர் உயரமானது என்றும், கடந்த 2009ம் ஆண்டு பிரேசிலில் அமைக்கப்பட்ட நத்தார் மரமே உலகில் உயரமான நத்தார் மரம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கின்னஸ் சாதனைப்படி அதன் உயரம் 128 மீட்டர் என்று அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.

