சிவனொளிபாதமலைக்கு போதைபொருள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை

332 0

1833072094untitled-1சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை, ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் நேற்று மாலை 03.30 அளவில், மவுசாகலை சந்தியில் உள்ள காவல் அறனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது ஹெரோயின் போதை பொருள் 40 மில்லிகிராம் வைத்திருந்த நபர் ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின் அவர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களில் ஒரு சிலர் போதை பொருள்களை கொண்டு செல்வதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்தே மோப்ப நாய்களின் உதவியுடன் இந்தத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த ஐம்பதற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. ஹட்டன் பொலிஸாரும், மஸ்கெலியா பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.