மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்

380 0

201612241603178648_127-crore-population-only-1-percent-paying-taxes_secvpf127 கோடி மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர் என்று வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் சென்னை கருத்தரங்கில் பேசினார்.

சென்னை சென்டினரி டிரஸ்ட் சார்பில் வரி ஏய்ப்பு, ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக பணத்தின் மதிப்பை குறைத்தல் பற்றிய கருத்தரங்கம் சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது.

சென்னை சென்டினரி டிரஸ்டின் தலைவரும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் விசுவநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய தலைமை கண்காணிப்பு ஆணையர் என்.விட்டல் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.சென்னை சென்டினரி டிரஸ்டின் செயலாளரும் தாகூர் கல்வி அறக்கட்டளைகளின் நிறுவனருமான ராஜாபாதர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வி.ஐ.டி. வேந்தர் பேசியதாவது:- உலகில் வளம் நிறைந்த நாடாக இந்தியா விளங்குகிறது. 127 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் 50 சதவிதத்தினர் இளைஞர்களாக உள்ளனர். அதில் 60 சதவிகிதத்தினர் 35 வயது உடையவர்கள். இவர்கள் மூலம் நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவர்களை நல்ல முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு வளர்ந்த நாடாக இந்தியா உருவாக வாய்ப்பு உள்ளது.

நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 73 சதவிகிதம் மட்டுமே உள்ளது. நமது நாட்டில் 14 கோடி பேர் உயர் கல்விக்கு செல்ல தகுதியுடையவர்களாக உள்ளனர். ஆனால் 3 கோடி நபருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதே போன்று நாட்டில் 30 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர்.

வரி ஏய்ப்பு நமது ரத்தத்தில் ஊறி உள்ளது. அப்பா வரி கட்டுவதில்லை, நான் ஏன் கட்ட வேண்டும் என்று பிள்ளைகள் நினைக்கின்றனர். 127 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 1 சதவிகிதத்தினர் மட்டுமே வரி செலுத்தும் நிலை உள்ளது. விரி செலுத்த தகுதியுடையவர்கள் அனைவரும் வரி செலுத்தும் நிலை வர வேண்டும்.நாட்டில் ஊழல் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. அமைச்சர் மற்றும் அரசு செயலர் ஊழல் செய்தால் அந்த துறையே ஊழலாக மாறிவிடும். நமது அண்டை நாடுகளில் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் உள்ளது. சீனாவில் கடந்த 3 வருடங்களில் 1 லட்சம் பேர் ஊழல் வழக்கிற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் என 1000 பேர் தான் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் யார் என்று இது வரையிலும் வெளியிடப்படவில்லை.
எனவே வரி ஏய்ப்பு, ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக நிரந்தரமான நடவடிக்கை தேவை. அதற்கு என்ன வழி என்பதை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வல்லுநர்கள் எடுத்துரைக்க வேண்டும். இதை தடுக்க வேண்டிய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் அரியானா மாநில முன்னாள் தலைமை செயலாளர் தேவசகாயம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரம், விஸ்வநாதன் ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராஜா கணேசன், மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் டாக்டர் அப்பாஸ் இப்ராகிம், கலசலிங்கம், பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.முன்னதாக மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் மறைந்த துக்ளக்ஆசிரியர் சோ. ராமசாமி ஆகியோரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.