போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் ராமமோகனராவுக்கு சிகிச்சை

357 0

201612251133262736_porur-ramachandra-hospital-rama-mohana-rao-treatment_secvpfராமமோகனராவ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் உள்பட பல கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சேகர் ரெட்டிக்கும் ராம மோகனராவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மணல் குவாரிகள் உள்ளிட்ட காண்டிராக்ட்டுகள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனால் ராமமோகன ராவ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். வருமானவரித்துறை சோதனைக்கு பிறகு சேகர் ரெட்டி கைதானது போல் ராமமோகனராவ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

இதை அறிந்து கொண்ட ராமமோகனராவுக்கு நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் தணிகாசலம் அவரது உடல் நிலையை கண்காணித்து வருகிறார்.

ராமமோகனராவ் சிகிச்சை பெறுவதையொட்டி உளவு பிரிவு போலீசார் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.ஆனால் ராமமோகன ராவை பார்க்க வெளியில் இருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை. அவரது உறவினர்கள் மட்டும் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.