நாடு முழுவதும் போராட்டங்கள் – சோனியா

362 0

sonia16 கட்சிகளை ஒன்று சேர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

நாணய தாள் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி இது தொடர்பாக சோனியா காந்தி ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளார்.

500, மற்றும் 1000 ரூபா நாணய தாள்கள் தடை என்ற அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்களிடம் பண பரிவர்த்தனையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.